
( வி.எம்.சாமி)
மலேசியாவை சேர்ந்த 5 பேர் தாங்கள் அணிந்திருந்த காலணியின் உள்ளங்கால்களில் 5 கிலோ எடைக்கொண்ட கொக்கையின் ரக போதைப் பொருளை ஜப்பான் நகரின் உள்ள டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தின் வழி கொண்டு சென்ற போது ஜப்பான் விமான நிலைய அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
19 வயதில் இருந்து 26 வயதுக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட மொத்தம் 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை கே.எல்.ஐ.ஏ2 விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டு சென்ற போது அதில் 5 பேர் கைது செய்யப்பட்டதுடன் மேலும் ஒருவர் மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை இயக்குனர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
ஜப்பான் விமான நிலையம் சென்றடைந்த சம்பந்தப்பட்ட மலேசியர்களை அமலாக்க பிரிவினர் தீவிர பரிசோதனை செய்த போது அவர்கள அணிந்திருந்த காலணியின் உள்ளங்கால்களில் போதைப் பொருளை மறைத்துவைத்து இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவர் மட்டுமே மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக டத்தோ ஹூசைன் ஒமர் கான் கூறினார்.
மேலும் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் பொது மக்கள் விடுமுறை கால சலுகைகள் என்ற போர்வையில் பலவித வாய்ப்புக்களை தருவதாக கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக வெளி நாடுகளில் உள்ள மற்றவர்களின் பயணப்பை அல்லது உடைமைகளை சுமந்து செல்லுமாறு கோரும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
