
(வி.எம்.சாமி)
நாட்டில் மிகவும் புகழ்பெற்று தரமிக்க லீ பிஸ்கட்ஸ் நிருவனம் தமது உற்பத்தியை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது சீன நாளிதழன சைனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜொகூர் பெந்தியான் தமது உற்பத்தியை தொடங்கிய இந்த லீ பிஸ்கட்ஸ் நிறுவனம் மலேசிய மற்றும் சிங்கப்பூர் ஆகிய மக்களை மிகவும் கவர்ந்த வகையில் பல தரப்பினலான சுவைமிக்க பிஸ்கட்ஸ் ரொட்டிகளை தயாரித்து வந்துள்ளது.
தமது தயாரிப்பு பொருட்களை உற்பத்தி செய்வதில் இருந்து இந்த தொழிற்சாலை நிருவனம் நிறுத்தப்பட்டாலும் அதன் எதிர்கால திட்டம் குறித்து எந்தத் தகவல்களை தரப்படவில்லை என்பதோடு அதன் வாடிக்கையாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு உற்பத்தி நிருத்தம் குறித்து அறிவிப்புகளை செய்து வருவதாக சைனா பிரஸ் தெரிவித்தது.
புகழ்பெற்ற லீ பிஸ்கட்ஸ் நிருவனம் 1934 ஆம் ஆண்டு ரப்பர் மற்றும் அன்னாசி பழ உற்பத்தியில் ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாகியவர் தொழிலதிபர் டான் ஸ்ரீ ஸ்ரீ லீ காங் சியான் என்பவரால் நிறுவப்பட்டது.
ரப்பர் ராஜா மற்றும் அன்னாசி ராஜா என்று அழைக்கப்பட்ட அவர் ஒரு வங்கியில் வேலை செய்துள்ளார். அதன் பின்னர் படிப்படியாக தொழில் துறையில் கால பதிக்கும் வகையில் ஓ.சி.பி.சி வங்கியை தோற்றுவிக்க இவர் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளதாக தி எட்ஜ் செய்தி வெளியிட்டிருந்தது.
லீ பிஸ்கட்ஸ்ன் முக்கிய தயாரிப்புகளில் சால்டைன் கிராக்கர்ஸ், மேரி பிஸ்கட்ஸ், பஃப்ஸ் லெமன், சாண்ட்விஸ் பிஸ்கட்ஸ், மற்றும் ஐஸ்டு ஜெம் பிஸ்கட்ஸ் போன்றவை அடங்கும்.
மலேசிய மற்றும் சிங்கப்பூரில் அதிக சத்துக்கள் நிறைந்த ருசி மற்றும் கோதுமை பிஸ்கட்ஸ்களை அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடி உற்பத்தி நிருவனம் இதுவாகும் என்று சைனா பிரஸ் செய்தியில் கூறியது.