
( வி.எம்.சாமி )
சிப்பாங் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் பரிமாற்று சேவையின் மூலம் வெளி நாட்டிற்கு கடத்தப்பட இருந்த மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு சிப் மற்றும் வேப் திரவகம் மூலம் போதைப்பொருள் கடத்த இருந்த முயற்சியை விமான நிலையை சுங்கத்துறையினர் கைப்பற்றி முறியடித்தனர்.இதன் மொத்த மதிப்பு 5 கோடியோ 40 லச்சத்து 10 ஆயிரம் வெள்ளி என்று கே.எல்.ஐ.ஏ விமான நிலையை சுங்கத்துறை தலைமை இயக்குனர் ஜீல்கிப்லீ முகமட் தெரிவித்தார்.
ஜீன் மாதம் 5 ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ நிலைய சுங்கத்துறையினர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 72 போட்டிகளில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு சிப்புக்களை கைப்பற்றி சோதனை நடத்திய போது சம்பந்தப்பட்ட பொருட்களை மலேசிய வழி ஒரு ஆசிய நாட்டிற்கு அனுப்பி வைக்க ஒரு மாற்று வழியாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனவே சம்பந்தப்பட்ட பொருட்களை வணிக வர்த்த அனுமதி இல்லாமல் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தை ஒரு மாற்று தளமான பயன்படுத்தும் வகையில் அந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
இரண்டாவது சம்பவமாக ஜீன் மாதம் 10 ஆம் தேதி காலை 10-50 மணிக்கு கே.எல்.ஐ.ஏ விமான நிலைய கிடங்கில் இருந்த 6 பொட்டலங்களை சுங்கத்துறையினர் கைப்பற்றியதாக அவர் சொன்னார். வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் உபரி பாகங்கள் என்று குறிப்பிடப்பட்ட அந்த பெட்டியில் 4760 கட்ராஜ் கொண்ட இருந்தாதாவும் அதனை கைப்பற்றியதாக குறிப்பிட்ட சுங்கத்துறை இயக்குனர் இதன் தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
