ஷா ஆலம் நெடுஞ்சாலையில் (KESAS) காவல்துறை வாகன அணிவகுப்பைப் பின் தொடர்ந்து சென்ற பொது வாகன ஓட்டுநர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

27 வயதான இந்திய இளைஞர் ஒருவர் இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில், (போக்குவரத்து நீதிமன்றம்) ஆஜர்படுத்தப்பட்டார்.

அக்டோபர் 7, 2026 அன்று, காலை சுமார் 9.32 மணியளவில், ஷா ஆலம் நெடுஞ்சாலையின் (KESAS) KM 48.5 இல் துணைப் பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்துச் சென்ற காவல்துறை வாகன அணிவகுப்பைப் பின்தொடர்ந்த ஹோண்டா CR-V சம்பந்தப்பட்ட வைரல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது (1).

பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறியதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் மீது 1967 ஆம் ஆண்டு காவல்துறை சட்டத்தின் பிரிவு 21(1) இன் கீழ் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் நீதிமன்றம் அவருக்கு RM4,000 அபராதம் அல்லது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் எட்டு (8) மாதங்கள் சிறைத்தண்டனை என்று அறிவிக்கப்பட்டது.

அரசு வாகன அணிவகுப்புகள் மற்றும் பிற சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து சாலைப் பயனாளிகளும் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை எப்போதும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என கோலாலம்பூர் ஜே.எஸ்.பி.டி. வலியுறுத்துகிற

ஏசிபி முகமது சம்சூரி பின் முகமது ஈசா

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரி இதனை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular