
(வி.எம்.சாமி)
சரவாக் சட்டமன்றம் நவம்பர் மாதத்திலோ அல்லது 2027ஆம் ஆண்டிற்கான சரவாக் மாநில வரவு செலவு பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு இரண்டு வார இடைவெளியில் கலைக்கப்படலாம் என்று சரவாக் மாநில சுற்றுலா, தொழில் மற்றும் நிகழ்கலை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ராஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.
சரவாக் மாநில பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. எனவே மாநில தேர்தல் விரைவில் வரும் என்பது ஏற்கனவே தெரிந்த விசயம்தான். தேர்தல் சட்டவிதிப்படி கலைக்கப்பட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தற்போது சட்ட மன்ற பதவிக்காலம் முடியும் வரை நீடித்தால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
எனவே மாநில தேர்தல் நெருங்கி வருவதாகவும் அதற்கான ஏற்ப்பாடுகள் தயார் செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சரவாக் மாநில தேர்தல் முறையாக நடைபெற தேர்தல் ஆணையத்திற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டி உள்ளதாக அவர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.
