
கே. சங்கவி
அலோர் காஜா: மலாக்கா தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக்கிவிட்ட நிலையில், பாரிசான் நேஷனல் தனது வேட்பாளர்களை அறிவிக்கத் தயாராக உள்ளது என மாநிலக் கூட்டணித் தலைவர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் நாள் நெருங்கி வருவதால், இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டத்தோ ஸ்ரீ அப் ரவுஃப் யூசோ தெரிவித்தார்.
“நாங்கள் அதை மிக விரைவில் அறிவிப்போம்,” என்று நேற்று இங்குள்ள கம்போங் புலாவில் மக்களை சந்தித்தபோது அவர் கூறினார்.
மலாக்காவின் தற்காலிக முதலமைச்சராகவும் இருக்கும் அப் ரவுஃப், தேர்தல் ஒத்துழைப்பு மற்றும் இட ஒதுக்கீடுகளை இறுதி செய்வதற்காக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட, பாரிசானின் தேர்தல் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல்களின் முடிவுகளும் வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
“விரைவில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அதன் முடிவு அறிவிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
