கல்வத் குற்றம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு நபர்கள் கைது!

கே. சங்கவி
ஷா ஆலம் – பெட்டாலிங் மாவட்டத்தில் ஒரு அரசியல் பிரமுகர் சம்பந்தப்பட்ட கல்வத் குற்றம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

அதன் இயக்குனர் டத்தோ முகமது ஷாஜிஹான் அஹ்மத், 1995 ஆம் ஆண்டு ஷரியா குற்றங்கள் சட்டம் (சிலாங்கூர்) பிரிவு 29-இன் கீழ் குற்றம் இழைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதைத் தொடர்ந்து, மாலை சுமார் 6 மணியளவில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
இதை உறுதிப்படுத்திய அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு RM3,000-க்கு குறையாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போகாதே சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

“எந்தவொரு தனிநபரையும் ஊகங்கள், விவாதங்கள் மற்றும் அவதூறுகளுக்கு உட்படுத்துவதன் மூலம் எந்த வகையிலும் அவமானப்படுத்த வேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு ஜெய்ஸ் (JAIS) அறிவுறுத்துகிறது,” என்று அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular