
வி.எம்.சாமி
சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள உலக தரத்திலான கார் பந்தயமான ஃபார்முலா எப்1 கார் பந்தயத்தை மீண்டும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
உலக தரத்திலான மோட்டார் பந்தய நிகழ்வை ஏற்று நடத்துவது தொடர்பாக கலந்துரையாடல்கள் எஃப்1 தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனோ டொமெனிகாலியுடன் நடத்தப்படும் என்று பிரதமர் கூறினார். இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றார்.
இதன் தொடர்பாக 9 ஆண்டுகளுக்கு பிறகு மலேசியாவில நடைபெற்ற கார் பந்தயத்திற்க்கு பிறகு மூண்டும் கார் பந்தயம் நடத்துவதற்கு எஃப்1 தலைவர் கதவை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிப்பாங்கில் நடைபெற்ற கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தை பார்த்த பிறகு அவர் பெர்னாமாவிடம் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரதமர் மீண்டும் கார் பந்தயத்தை மலேசியாவில நடத்துவதற்கான செலவினங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டி உள்ளதாக அவர் கூறினார்.
முன்பதாக பிரதமர் பஹ்ரைனின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் ஹமத் அல் அலீஃபாவுடன் இணைந்து கார் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
