10,000 மியான்மர் கைதிகள் வான் மற்றும் கடல் வழிகள் மூலம் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மொத்தம் 10,000 மியான்மர் கைதிகள் வான் மற்றும் கடல் வழிகள் மூலம் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசிய அரசாங்கத்திற்கும் மியான்மர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகளைத் தொடர்ந்து இந்த நாடு திரும்புதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

மியான்மர் நாட்டினரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ரோஹிங்கியா இனத்தவர் மட்டுமல்லாமல், அரக்கான், கரேன் மற்றும் ஷான் இனத்தவரும் அடங்குவர் என்று பிரதமர் கூறினார்.

“அந்த மொத்த எண்ணிக்கையில், சிலர் மியான்மர் அரசாங்கத்தின் சொந்த முயற்சியின் கீழ் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர், மீதமுள்ள சுமார் 1,400 பேர் சமீபத்தில் அந்நாட்டின் கடற்படைக் கப்பல்கள் மூலம் தாயகம் திரும்பினர்,” என்று அவர் கூறினார்.

அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் உள்ளிட்ட மியான்மர் நாட்டினர், குறிப்பாக நாட்டில் உள்ள ரோஹிங்கியா இனக்குழுவினர் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சுஹைசான் கயாத் (பிஎச்-புலாய்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று தேவன் ரக்யாத்தில் நடைபெற்ற அமைச்சர்களின் கேள்வி நேர அமர்வின்போது அன்வர் இவ்வாறு கூறினார்.

திறமையான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர அணுகுமுறைகள் மூலம் மியான்மர் கைதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கு வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பிய முதல் நாடு மலேசியா என்று அவர் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular