
(வி.எம்.சாமி)
பஹ்ரைன் நாட்டிற்கு சொந்தமான கல்ஃப் ஏர் விமானம் மீண்டும் கோலாலம்பூர் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்திற்கும் இடையிலான வாரத்தில் மூன்று நேரடி பயணங்களை தொடங்கியது.
இன்று காலை கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் வந்தடைந்த கல்ஃப் ஏர் விமான வெள்ளோட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழவில் கலந்துக் கொண்ட மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ முகமது இசானி கனி இந்த புதிய வரவால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான இணைப்பை சேர்த்துள்ளது என்று பாராட்டினார்.
தற்போது இந்த விமான நிலையத்தில் 10 மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் தமது சேவையை வழங்கி வருகின்றது. அத்துடன் இந்த கல்ஃப் ஏர் விமானம் இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா தொழில் இணைப்பிற்கு ஒரு மைல் கல்லாக அமைவதாக டத்தோ முகமது இசானி கனி தெரிவித்தார்.
மேலும் அவர் இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கே.எல்.ஐ.ஏ விமான நிலையம் 31.7 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே பயணத்த 1.2 மில்லியன் பயணிகளும் அடங்குவர்.
எனவே இந்த கல்ஃப் ஏர் விமான சேவை பஹ்ரைனுக்கும் கோலாலம்பூருக்கும் இடையே நேரடி பயணத்தை தொடங்கவதால் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதோடு இந்த விமான நிலையத்தின் வாயிலாக மிகப்பெரிய சந்தையை உருவாக்கும் என்றார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கல்ஃப் ஏர் விமான சேவையை தொடங்கியதால் தற்போது போயிங் 787 ரக மிகப்பெரிய விமானத்தை பயன்படுத்தி வாரத்திற்கு இரு நாடுகளுக்கு இடையே மூன்று நேரடி விமான பயணங்கள் நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.
